கோலாலம்பூர், நவ 26 – பகாங் மாநில சட்டமன்றத்தின் நிதி நிலை அறிக்கையை பொய் என்று விமர்சித்த காரணத்திற்காக பிகேஆர் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் இரண்டு கூட்டங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பகாங் மாநில மந்திரி பெசார் அட்னான் யாக்கோப் லீ சியானுக்கு எதிரான இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
இது குறித்து லீ சியான் கூறுகையில், உரிமைக் குழுவின் முன்பாக என் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பு கொடுக்காமலேயே என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
மேலும், இது அட்னான் சார்பான மன்றம் என்றும், இங்கு ஜனநாயகம் இல்லை என்றும் லீ சியான் விமர்சித்தார்.
இந்த இடைநீக்க தீர்மானத்திற்கு 29 பேர் ஆதரவாகவும், 12 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.