Home 13வது பொதுத் தேர்தல் இளைஞர் பிரிவுத் தேர்தல்: 38 பேராளர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

இளைஞர் பிரிவுத் தேர்தல்: 38 பேராளர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம்!

601
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர், நவ 28 – கடந்த் நவ 16 ஆம் தேதி நடைபெற்ற ம.இ.கா இளைஞர் பிரிவுத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகார்களால், அத்தேர்தல் முடிவுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று அதன் தலைமைச் செயலாளர் நேற்று முன்தினம் அறிவித்தார்.

மேலும், 35 பேராளர்களுடன் சேர்ந்து தலைவரும், 2 மத்திய செயலவை உறுப்பினர்களும் தேசியப் பேரவைத் தேர்தலில் பங்கேற்கவும், வாக்களிக்கவும் முடியாது என்றும் நேற்று முன் தினம் சக்திவேல் அறிவித்தார்.

அவரது அறிவிப்பால் ம.இ.கா வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, நேற்று காலை ம.இ.கா தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழுவின் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற கடும் விவாதங்களின் முடிவாக, ரத்து செய்யப்பட்ட 38 பேராளர்களும் தேசியப் பேரவைத் தேர்தலில் பங்கேற்கவும், வாக்களிக்கவும் முடிவும் என்று மறு அறிவிப்பு செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

அதோடு, வெளிநாட்டில் இருக்கக்கூடிய பேராளர் ஒருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களை வைத்து சம்பந்தப்பட்ட நபரின் உறுப்பினர் அந்தஸ்தும் பறிக்கப்பட்டதாக தலைமைச் செயலாளர் சக்திவேல் அறிவித்தார்.

அறிவித்த 24 மணி நேரத்திற்குள், விடுக்கப்பட்ட இந்த மாற்று அறிவிப்பால் கட்சி வட்டாரங்களில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.