Home கலை உலகம் சின்ன கலைவாணர் பட்டம் விவேக் மீது பரபரப்பு புகார்

சின்ன கலைவாணர் பட்டம் விவேக் மீது பரபரப்பு புகார்

715
0
SHARE
Ad

Vivek1

சென்னை, நவம்பர் 28- சின்ன கலைவாணர் பட்டத்தை நடிகர் விவேக் பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த நகைச்சுவை நடிகர் குல தெய்வம் ராஜகோபாலின் மகன் சவுந்திர பாண்டியன். இவர் நடிகர் சங்கத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது,“ நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பு திறமையை மையமாக வைத்து ரசிகர்கள் சார்பில் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1962ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மனைவி மதுரம் மற்றும் எழுத்தாளர் தமிழ்வாணன் ஆகியோரால் என் தந்தை குல தெய்வம் ராஜகோபாலுக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தின் மரியாதைக்குரிய பொக்கிஷமாக அந்த பட்டத்தை போற்றி வருகிறோம்.

#TamilSchoolmychoice

ஆனால் நடிகர் விவேக்கும் அந்த பட்டத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்கள் தந்தை வாங்கிய பட்டத்தை காப்பாற்றுவதற்காக போராட வேண்டிய சூழ்நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம். விவேக் இந்த பட்டத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் சவுந்திர பாண்டியன் கூறியுள்ளார்.