கோலாலம்பூர், நவம்பர் 28- சாம்சங் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி S4 திறன்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி S5 திறன்பேசியினை வடிவமைக்கும் முயற்சியில் அந்நிறுவனம் மும்முரமாக களமிறங்கியுள்ளது.
தற்போது இக்கைப்பேசி தொடர்பான சில பரபரப்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
அதன் அடிப்படையில், இத்திறன்பேசி மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் (Multi-Party Video Conferencing) ஒரே நேரத்தில் வீடியோ அழைப்பினை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தவிர 5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 பிக்சல் தீர்மானம் (Pixel Resoution) உடையதுமான தொடுதிரையினைக் கொண்டிருப்பதுடன், 64 பிட் செயலி (64 bit Processor), 4ஜிபி ரேம், 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா போன்றவற்றினையும் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.