Home தொழில் நுட்பம் ஏப்ரல் 11 முதல் சாம்சங் கேலக்ஸி S5 விற்பனை!

ஏப்ரல் 11 முதல் சாம்சங் கேலக்ஸி S5 விற்பனை!

668
0
SHARE
Ad

Galaxy S5மார்ச் 28 – சாம்சங் நிறுவனம், வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தன் புதிய தாயாரிப்பான கேலக்ஸி S5 (Galaxy S 5) திறன்பேசிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11, தேதி சந்தைப்படுத்த இருக்கின்றது.

கடந்த மாதம் பார்சிலோனவில் நடைபெற்ற அனைத்துலக செல்பேசி மாநாட்டில் (Mobile World Congress) முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கேலக்ஸி S5’ (Galaxy S 5) திறன்பேசிகளானது பல்வேறு நவீன சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

“சாம்சங் கேலக்ஸி S5 திறன்பேசிகளானது, மற்ற திறன்பேசிகளுடன் ஒப்பிடுகையில் திருட்டைத் தடுக்கும் கைரேகை ஸ்கேனர், நீர்புகாத் தன்மை, இதயத் துடிப்பை அளக்கும் சென்சார் என மூன்று முக்கிய காரணிகளை பிரதானமாகக் கொண்டுள்ளது”

“இதுமட்டுமில்லாமல் கேலக்ஸி நோட் 3-ல் உள்ளது போன்ற ஃபாக்ஸ் தோல் வடிவமைப்பு, 5.1 அங்குல அளவு, 1080 x 1920 பிக்சல் தீர்மானம் (Pixel Resolution) உடைய AMOLED தொடுதிரை, 2ஜிபி முதன்மை நினைவகம், 4.4.2 ஆண்டிராய்டு இயங்குதளம் மற்றும் Quad Core Snapdragon 2.5GHz செயலி (processor) ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது” எனத் அறிவித்துள்ளது.

கேலக்ஸி S5 யுடன் Gear 2, Fit என்ற இரு திறன் கைக்கடிகாரங்கள் முறையே RM899 மற்றும் RM599 என்ற விலையில் அறிமுகமாக இருக்கின்றன. இந்த திறன் கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் இதயத்துடிப்பின் அளவினை சரிபார்த்துக்கொள்வது, தங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ளவது போன்றவற்றை செய்ய இயலும் என்பது கூடுதல் தகவலாகும் .