லண்டன், மே 20 – முன்னணி திறன்பேசிகள் வடிவமைப்பு நிறுவனமான சாம்சங், கடந்த மாதம் அறிமுகப்படுத்திய கேலக்ஸி S5 திறன்பேசியானது விற்பனையில் சாதனைப் படைத்து வருகின்றது. இந்நிலையில், அந்நிறுவனம் இந்த திறன்பேசியினை மேலும் பிரபலமடையச் செய்வதற்காக பல விளம்பர யுக்திகளைக் கையாண்டு வருகின்றது.
தற்போது, லண்டனில் புகழ் பெற்ற ஹீத்ரோ விமான நிலையத்தில், 5-ஆம் முனையத்தை ‘டெர்மினல் சாம்சங் கேலக்ஸி S5’ (Terminal Samsung Galaxy S5) என்ற பெயர் மாற்றியதன் மூலமாக தனது திறன்பேசிகளுக்கான விளம்பரத்தினை சாம்சங் தேடிக் கொண்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் ஆனது சுமார் 2 வார காலம் மட்டுமே நீடிக்கும் என்று கூறப்படுகின்றது.
இத விளம்பரம் குறித்து இங்லாந்தின் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸின் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் ரஸ்ஸல் டெய்லர் கூறுகையில், “ஹீத்ரோ மற்றும் ஜெசி டெக்கஸ் விமான நிலையங்களுடன் ஏற்பட்ட உடன்படிக்கை காரணமாக இந்த விளம்பரம் சாத்தியமாயிற்று. வேறு எந்த நிறுவனமும் இத்தகைய விளம்பரத்திற்கு முயன்றதில்லை” என்று கூறியுள்ளார்.
உலகமெங்கிலும் 125 நாடுகளில் கேலக்ஸி S5 அறிமுகமாகியுள்ளது. தற்போது வரை இதன் விற்பனையானது சுமார் 11 மில்லியன்களைத் தாண்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.