Home உலகம் லண்டனில் நடைபெற்ற மாவீரர் தினம் நிகழ்வுகள்

லண்டனில் நடைபெற்ற மாவீரர் தினம் நிகழ்வுகள்

450
0
SHARE
Ad

tigers_heros_day_2

லண்டன் , நவம்பர் 28- இலங்கைப் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதற்கான ”மாவீரர் தின நிகழ்வுகள்” லண்டனிலுள்ள எக்ஸ்சல் மண்டபத்தில் நடந்தது.

பிரிட்டனைச் சேர்ந்த ”தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம்” என்னும் அமைப்பினால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

நண்பகல் அளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பிரிட்டன் வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர்.

பெரும்பாலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களையும், வேறு இயக்கங்களில் இருந்து உயிரிழந்த சிலரையும் சேர்த்து அஞ்சலி செய்ததாக விழாவின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான கந்தையா இராஜமனோகரன் தமிழோசையிடம் கூறினார்.