Home வணிகம்/தொழில் நுட்பம் டோனி பெர்னாண்டசிற்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

டோனி பெர்னாண்டசிற்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

582
0
SHARE
Ad

airr

கோலாலம்பூர், நவம்பர் 28 – விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வரலாற்றைப் படைத்திருக்கும் ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டசிற்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1802 ஆம் ஆண்டு அப்போதைய பிரேஞ்சு சக்கரவர்த்தி மாவீரன் நெப்போலியன் தொடங்கிய லெஜண்ட் டி ஹோனர் என்ற விருது டோனி பெர்னாண்டசிற்கு வழங்கப்பட்டுள்ளது. பிரேஞ்சு நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவருக்குதான் இத்தகைய விருது வழங்கப்படுவது வழக்கம்.

#TamilSchoolmychoice

இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம். எனக்கு பிரேஞ்சு அரசாங்கம் வழங்கிய அங்கீகாரத்தை மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று டோனி பெர்னாண்டஸ் கூறினார்.