கோலாலம்பூர், நவ 28 – துணை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் லோக பாலமோகன், சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை அமல்படுத்தும் நாள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று தவறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று ஜசெக செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், உரிமை மற்றும் சலுகைகள் குழுவிடம் புகார் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் லோக பாலமோகன் (படம்) நேற்று வெளியிட்ட அறிக்கையில், சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஜனவரி 2014 ல் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குறித்து வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில், விளக்கம் கேட்பதாக சபாநாயகர் பண்டிகர் அமின் மூலியா கூறினார்.