Home கலை உலகம் பிரபல நடன இயக்குநர் ரகுராம் மரணம்!

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மரணம்!

544
0
SHARE
Ad

30-dance-master-raghuram-600

சென்னை, டிசம்பர் 1- பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர் நேற்று அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

இந்திய சினிமாவில் பல நூறு படங்களில் 50 ஆண்டு காலம் நடன இயக்குநராக பணியாற்றியவர் ரகுராம்.

#TamilSchoolmychoice

நேற்று பிற்பகல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரகுராமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில் அவர் உயிர் பிரிந்தது.

ரகுராமின் மகள்தான் பிரபல நடிகை காயத்ரி ரகுராம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகலுக்குப் பிறகு அவர் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.