Home இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக பயணத்தை தொடங்கியது ‘மங்கல்யான்’

செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக பயணத்தை தொடங்கியது ‘மங்கல்யான்’

901
0
SHARE
Ad

aaa

டிசம்பர் 1- செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்ணில் ஏவப்பட்ட, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் இன்று புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை துவக்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த, ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் நவம்பர் 16ம் தேதி பூமியில் இருந்து 1,92,874 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இன்று அதிகாலை, 12:30 மணிக்கு ‘மங்கல்யான்’ செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாதையை நோக்கி திருப்பப்பட்டது. தொடந்து 12.49 மணிக்கு மங்கல்யான் செயற்கைக்கோளை செவ்வாய் நோக்கி அனுப்பும் பணி துவங்கி வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் நோக்கி தனது 68 கோடி கி.மீ பயணத்தை துவக்கியது.

நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான், விண்வெளியில் பயணித்து 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடையும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட செவ்வாய் கிரக சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது.