Home இந்தியா மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம் ‘ஹெலன் புயல்’

மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம் ‘ஹெலன் புயல்’

506
0
SHARE
Ad

Tamil-Daily-News_37071955205

ஸ்ரீஹரிக்கோட்டா, நவம்பர் 22- செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த 5ம் தேதி மங்கல்யான் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி விண்வெளிகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் மங்கல்யான், தனது முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்தி வரும் ஹெலன் புயலின் நிலையைதான் மங்கல்யான் தனது முதல் புகைப்படமாக அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணில் ஏவப்பட்டுள்ள மங்கல்யான், முழுவதும் இந்தியாவின் உள்ளூர் தொழில்நுட்பத்தில் உருவானதாகும். 5 கட்டங்களாக மங்கல்யானின் சுற்றுவட்டப் பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டு தற்போது நிலையாக பயணித்து வருகிறது. பூமியிலிருந்து அருகில் 216 கிலோமீட்டரும், தொலைவில் 1 லட்சத்து 92 ஆயிரம் கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் இப்போது சுற்றி வருகிறது. டிசம்பர் முதல் தேதி மங்கல்யான் தனது செவ்வாய் கிரக பயணத்தை துவக்க உள்ளது.