Home கலை உலகம் கார் விபத்தில் ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் பலி

கார் விபத்தில் ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் பலி

678
0
SHARE
Ad

LONDON, ENGLAND - MAY 07:  Actor Paul Walker attends the World Premiere of 'Fast & Furious 6' at Empire Leicester Square on May 7, 2013 in London, England.  (Photo by Tim P. Whitby/Getty Images)

லாஸ் ஏஞ்சல்ஸ், டிசம்பர் 2- பிரபல ஹாலிவுட் நடிகர், பால் வாக்கர் கார் விபத்தில் பலியானார். அவருக்கு வயது 40. ஹாலிவுட் படமான பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பால் வாக்கர்.

இப்போது பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் 7-ம் பாகத்தில் நடித்து வந்தார். இவர் சனிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பிலிப்பைன்சில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டார்.

#TamilSchoolmychoice

பின்னர் அங்கிருந்து அவரது நண்பருடன் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறுமாக ஓடியது. பின்னர் சாலையோரமாக இருந்த மின்கம்பத்திலும் மரத்திலும் பயங்கரமாக மோதியது.

BaXvh0MCMAAr2iT

இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் வாக்கரும் அவரது நண்பரும் உடல் கருகி பலியாயினர். இச்சம்பவம் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.