Home அரசியல் “பொதுத்தேர்தல் ஒன்றும் பூபந்தாட்ட விளையாட்டு அல்ல” – லிம் குவான் எங்

“பொதுத்தேர்தல் ஒன்றும் பூபந்தாட்ட விளையாட்டு அல்ல” – லிம் குவான் எங்

734
0
SHARE
Ad

Lim Guan Engகோலாலம்பூர், டிச 7 – பொதுத்தேர்தல் ஒன்றும் பூப்பந்தாட்ட விளையாட்டு அல்ல, யார் அதிக சுற்றுக்களைப் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவதற்கு என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

“பொதுத்தேர்தல் உங்களுக்கு விளையாட்டாகத் தெரிகிறதா?” என்றும் லிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று பொதுத்தேர்தலை பூபந்தாட்டத்துடன் ஒப்பிட்டு அறிக்கை விடுத்த நஜிப்,”முதல் சுற்றில் நஜிப் 21 – 15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் நஜிப் 5-21 என்ற கணக்கில் தோல்வியுற்றார். மூன்றாவது சுற்றில் நஜிப் 21 – 16 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். விளையாட்டு விதிமுறைகளின் படி, நஜிப் வெற்றியடைந்தார். ஆனால் அன்வார் தான் 57 புள்ளிகள் பெற்றுள்ளதாகவும், நஜிப் 47 புள்ளிகள் தான் பெற்றார் என்றும் கூறி போராட்டம் செய்கிறார்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், நஜிப்பின் கருத்தை விமர்சித்த லிம் குவான் எங், “பிரதமர் இது போன்ற முரண்பாடான கருத்துக்களை வெளியிடுகிறார்.” என்று கூறினார்.

மேலும், “பூபந்தாட்டத்துடன் பொதுத்தேர்தலை ஒப்பிட முடியாது. உதாரணமாக புத்ரஜெயாவில் உள்ள 17,000 வாக்காளர்களைக் காட்டிலும் காப்பார் போன்ற தொகுதிகளில் மிதமிஞ்சிய வாக்காளர்கள் (சுமார் 160,000) பேர் உள்ளனர்.”

“எனவே காப்பார் போன்ற தொகுதிகளில், 160 புள்ளிகள் எடுத்தால் தான் வெற்றியடைய முடியும். ஆனால் புத்ராஜெயா போன்ற தொகுதிகளில் 17 புள்ளிகள் எடுத்தாலே வெற்றி பெற்றுவிட முடியும்.எனவே ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிகளிலும் பெறக்கூடிய புள்ளிகள் வித்தியாசப்படும்.” என்று லிம் தெரிவித்தார்.

“காப்பாரில் 160,000 வாக்காளர்கள் மற்றும் புத்ரஜெயாவில் 17,000 வாக்காளர்கள். இது நியாயமா?” லிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அப்படி பொதுத்தேர்தலும் பூபந்தாட்ட விளையாட்டும் ஒன்று என்றால், உலக சாம்பியன்களான லீ சாங் வெய் அல்லது லின் டான் கூட அதில் வெற்றியடைய முடியாது” என்றும் லிம் குறிப்பிட்டார்.