Home இந்தியா ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி மக்கள் கொடுத்த பரிசு – ஜெயலலிதா அறிக்கை

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி மக்கள் கொடுத்த பரிசு – ஜெயலலிதா அறிக்கை

536
0
SHARE
Ad

Tamil-Daily-News_17033022643

சென்னை, டிசம்பர் 9- அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று நடந்த ஏற்காடு இடைத்தேர்தலின் அறிக்கையை வெளியிட்டார். ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி தனக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சியை தருகிறது. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அரும்பணியாற்றி, அதிமுகவை வெற்றிப்பாதையில் நடைபோட, அல்லும் பகலும் அயராது உழைத்தவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் மக்களவை பொது தேர்தலிலும் இதேபோல் சிறப்பாக பணியாற்றி, அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வென்றது என்ற நிலை உருவாக உழைப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மக்களவை பொதுத்தேர்தலில் ஒரு முழுமையான வெற்றியை அதிமுக பெற்றால் மட்டுமே அகில இந்திய அளவில் சிறந்த ஆட்சியும், நிர்வாகமும் நடைபெறுவதற்கு நம்முடைய பங்களிப்பை நாம் தரமுடியும். ஏற்காடு தொகுதி வாழ் வாக்காள பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்கு அயராது உழைத்த அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் , “கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழக மக்கள் நல பணிகளில் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக, தமிழக மக்கள் அதிமுக அரசுக்கு கொடுத்த பரிசுதான் ஏற்காடு இடைதேர்தல் வெற்றி” எனவும் ஜெயலலிதா கூறினார்.