உலக ஊழல் ஒழிப்பு தினமான இன்று இது குறித்து கருத்துரைத்த அன்வார், இந்த நாட்டில் ஊழல் பெருகியுள்ளது என்பதற்கு ஆதாரமாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை 2013 ஐக் காட்டலாம் என்று குறிப்பிட்டார்.
“இதில் ஊழலுக்கு எதிராக போராடுவதில் அரசாங்கம் எந்த ஒரு உறுதியும் எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஊழல் இல்லா நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், 117 நாடுகளில் சிங்கப்பூருக்கு 5 வது இடமும், புருனேவிற்கு 38வது இடமும் கிடைத்துள்ளது. அதனை ஒப்பிடுகையில் மலேசியாவிற்கு 53 வது இடம் தான் கிடைத்துள்ளது.”
மேலும், ஊழலால் நாட்டில் கருவூலத்தில் உள்ள பொருளாதாரம் பாதிப்படைந்து, புதிய வரிகள், பொருட்கள் மற்றும் சேவை வரி என அந்த சுமை குடிமக்களின் தலையில் விழுகின்றது என்றும் அன்வார் கூறினார்.