ஜோகனஸ்பர்க், டிசம்பர் 11- தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா ஜோகனஸ்பர்கில் உள்ள தனது வீட்டில் கடந்த 6-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் நேற்று ஜொகனஸ்பர்க் நகரில் உள்ள எப்.என்.பி மைதானத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
மண்டேலாவுக்கு உலக தலைவர்கள் நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம் நேற்று நடைபெற்றது . பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பல நாட்டு தலைவர்களும் கலந்துகொண்டனர். இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ், அமெரிக்காவின் ஒபாமா, கியுபாவின் ரவுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 53 நாடுகளின் தலைவர்களும் அடங்குவர்.
இவர்களில் குடியரசு தலைவர் பிரணாப், கியுபாவின் ரவுல் காஸ்ட்ரோ, சீனாவின் லீ யுனாச்சவோ, அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரேசில் தலைவர் தில்மா ரூஸ்செப், நமிபியாவின் ஹிபிகேபுன்யே போஹம்பா ஆகிய 6 தலைவர்கள் மட்டுமே சிறப்புரை ஆற்றினர்.