Home அரசியல் “அன்வார் இல்லாவிட்டாலும் பிகேஆர் தொடர்ந்து செயல்படும்” – அஸ்மின் அலி

“அன்வார் இல்லாவிட்டாலும் பிகேஆர் தொடர்ந்து செயல்படும்” – அஸ்மின் அலி

738
0
SHARE
Ad

Anwar-Ibrahim-300x202பெட்டாலிங் ஜெயா, டிச 13 –  பிகேஆர் கட்சி அன்வாரை என்ற தனி மனிதரை சார்ந்து இருக்கவில்லை. மாறாக அக்கட்சியை ஆதரிக்கும் மக்களிடம் தான் இருக்கிறது என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியிருக்கிறார்.

பிகேஆர் ஆலோசகராக இருக்கும் அன்வார் இப்ராகிம் அரசியலில் இல்லாவிட்டாலும் கூட கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அன்வார் இல்லாத பிகேஆர் கட்சி டத்தோ ஓன் ஜபார் இல்லாத பார்ட்டி நெகாராவைப் போல் காணாமல் போய்விடும் என்ற கூற்றையும் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான அஸ்மின் அலி மறுத்தார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அஸ்மின் அலி மேலும் கூறியிருப்பதாவது:

“காலம் மாறிவிட்டது. கோரிக்கைகளும் மாறிவிட்டன. புதிய சவால்களை எதிர்நோக்குகின்றோம். 1998 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்று தெரியாத இளம் வாக்காளர்களையும் கட்சி உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறோம்.”

“உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையில் தங்களது வாக்குகளை நிறைவேற்றும் கட்சியை அவர்கள் தேடுகின்றனர்.வளர்ச்சி என்ற சொல்லுக்கு தற்போது மேலும் விரிவான அர்த்தம் கொள்ளப்பட்டிருக்கிறது.”

“அவர்கள் அடிப்படை மனித உரிமை, ஜனநாயகம், சுதந்திரம், பேச்சுரிமை, ஊடக சுதந்திரம் ஆகியவற்றிலும் வளர்ச்சி ஏற்படுவதைக் காண விரும்புகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.