Home இந்தியா தமிழக அமைச்சர் வைத்திலிங்கம் கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்!

தமிழக அமைச்சர் வைத்திலிங்கம் கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார்!

521
0
SHARE
Ad

repair14122013

#TamilSchoolmychoice

சென்னை, டிசம்பர் 16– தமிழ் நாட்டின் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில்உயிர்தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர், பொதுமக்கள்அவரைப் பார்க்க திரண்டு வந்து விட்டனர்.

அண்மையில் நடந்த ஏற்காடுசட்டமன்றத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்வாழப்பாடியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர்வைத்திலிங்கம் தஞ்சையில் இருந்து காரில் வாழப்பாடி புறப்பட்டு சென்றார்.கார் தம்மம்பட்டி அருகே வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அமைச்சர் வைத்திலிங்கம், உள்பட அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

சம்பவ இடத்துக்கு வந்த மற்ற அமைச்சர்களின் பாதுகாப்பு காவல் துறையினர் மற்றும்பொதுமக்கள் அவர்களை மீட்டு வேறொரு காரில் அனுப்பி வைத்தனர்.பின்னர் அமைச்சர் வைத்திலிங்கம வாழப்பாடி சென்று பொதுக்கூட்டத்தில்பங்கேற்றார்.

அமைச்சர் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்ததும்இன்று காலை தொண்டர்களும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.அவர்களை அமைதிப்படுத்திய அமைச்சர், எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.நீங்கள் அனைவரும் அமைதியாக வீட்டிற்குச் செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்என தமிழக இணையத் தள ஊடகங்கள் தெரிவித்தன.