Home இந்தியா மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலா காலமானார்!

மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலா காலமானார்!

528
0
SHARE
Ad

Tamil-Daily-News_57096064091

புதுடெல்லி, டிசம்பர் 16- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான சிஸ்ராம் ஓலா டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

சிஸ்ராம் ஓலா 1927 ம் ஆண்டு பிறந்தவர். ராஜஸ்தானில் உள்ள ஜாட் இன மக்களின் தலைவராக விளங்கினார். மாநிலத்தில் 1957ல் இருந்து 1990 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

#TamilSchoolmychoice

1980 முதல் 1990 வரை ராஜஸ்தான் மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.  நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள குர்கான் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

மறைந்த மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலாவின் உடலுக்கு காங்கிரசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.