ஷா ஆலம், டிச 16 – ஷா ஆலம்- ல் நேற்று சிலாங்கூர் மாநில ஜசெக மாநாடு மற்றும் தேர்தல் நடைபெற்றது. அதில் 15 தலைமைத்துவ பதவிகளுக்கு 36 பேர் போட்டியிட்டனர். அதில் 9 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் ஹன்னா தியோ 495 வாக்குகள், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் 491 வாக்குகள் பெற்று 2 வது நிலையிலும், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் 451 வாக்குகள் பெற்று 3 வது நிலையிலும் வெற்றி பெற்றனர்.
மேலும் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் 435 வாக்குகள், ஸ்ரீ கெம்பாங்கன் சட்டமன்ற உறுப்பினர் இயான் வா 423 வாக்குகள், பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா 422 வாக்குகள், செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம் 411 வாக்குகள், தியூ வேய் கெங் 411 வாக்குகள், முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியூ 370 வாக்குகள், தெப்பி சுங்கை சட்டமன்ற உறுப்பினர் தெங் சான் கிம் 358 வாக்குகள், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ 335 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
இவர்களைத் தவிர, ஜசெக கட்சியில் இளம் வேட்பாளரான டி.கண்ணன் 301 வாக்குகள் பெற்று 15 வது நிலையில் வெற்றி பெற்றார். டி.கண்ணனின் வெற்றி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.