Home இந்தியா கூடங்குளம் அருகே வெடிவிபத்து!

கூடங்குளம் அருகே வெடிவிபத்து!

720
0
SHARE
Ad

TH03_KUDANKULAM_1164176fதிருநெல்வேலி, டிச 17 – திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரையில் நேற்று நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் இரு தரப்பு மீனவர்கள் மோதிக் கொண்டதால் இவ்வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்தையொட்டி, அப்பகுதியில் நிறைய காவல்துறையினர் ரோந்து பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு முன்னரே அங்குள்ள காவல்துறையினர் இடிந்தகரை  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தி ஏராளமான வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், அந்த பகுதியில் மீண்டும் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது காவல்துறையினரை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.