Home Featured இந்தியா இந்தியாவின் அணு ஆயுத நகரம் மைசூர் – அமெரிக்கப் பத்திரிக்கை பகீர் தகவல்!  

இந்தியாவின் அணு ஆயுத நகரம் மைசூர் – அமெரிக்கப் பத்திரிக்கை பகீர் தகவல்!  

1065
0
SHARE
Ad

anuவாஷிங்டன் – தெற்காசியாவில் மிகப் பெரிய இராணுவ மையத்தை, அணு ஆயுதங்கள் தேக்கி வைக்கும் கிடங்கை உருவாக்க முடிவு செய்த இந்தியா, கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தை முடிவு செய்து அங்கு பல்வேறு கட்ட ரகசிய வேலைகளை செய்து வருகிறது.  2017-ம் ஆண்டு அந்த அணு ஆயுத நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்து விடும். இந்த நகரம் சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என பகீர் தகவல் ஒன்றை அமெரிக்க புலனாய்வுப் பத்திரிகையான ‘ஃபாரின் பாலிசி’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கு அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சுமூக உறவு என்பது கால காலமாக இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதி, அந்நாடுகள் தங்களை சர்வ வல்லமை படைத்த நாடுகளாக மாற்ற பல்வேறு வழிகளை முயன்று வருகின்றன.

இதில் இந்தியா, பாகிஸ்தானை விட பலம் பெற்று இருந்தாலும், சீனாவின் இராணுவ வலிமைக்கு ஈடு செய்ய முடியாது. அதனால் தற்காப்பு நடவடிக்கையாக இந்த அணு ஆயுத நகரம் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படி உருவாகும் நகரம், அணு ஆயுதங்கள் தேக்கி வைக்கப்படும் இடமாகவும், அணு ஆயுத ஆராய்ச்சி கூடங்களும் கொண்டிருப்பதோடு, அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் கொண்ட பிரமாண்டமான அணு ஆயுத நகராக விளங்கும் என ஃபாரின் பாலிசி குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் தாங்கள் வெளியிட்டு இருக்கும் இந்த தகவல், இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் வாஷிங்டன், லண்டன் நகரங்களை சேர்ந்த ராணுவ நிபுணர்களின் பல கட்ட ஆய்வுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஃபாரின் பாலிசி தெரிவித்துள்ளது.