Home Featured நாடு டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவின் ‘ஆன்மிகமும் நானும்’ நூல் வெளியீட்டு விழா

டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவின் ‘ஆன்மிகமும் நானும்’ நூல் வெளியீட்டு விழா

660
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தலைநகர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா எழுதியுள்ள ‘ஆன்மிகமும் நானும்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை 20 டிசம்பர் 2015ஆம் நாள் மாலை 5.00 மணிக்கு கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயக் கட்டிடத்தில் 5வது மாடியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும்.

nadarajaகடந்த நவம்பர் 1ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நூலின் வெளியீட்டு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் அப்போது ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் முன்னிலை வகிக்க, தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புக்கான சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சாமிவேலு தலைமையுரையாற்றி நூலை வெளியீடு செய்வார்.

#TamilSchoolmychoice

இந்நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு தருமபுர ஆதீன கட்டளையைச் சேர்ந்த முனைவர் ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும், மலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் அதிபர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்குவார்கள்.

நூலைப் பற்றிய தொகுப்புரையை தேவஸ்தானத்தின் பொருளாளர் பெ.அழகன் வழங்குவார்.

நிகழ்ச்சியின் நிறைவில் நூலாசிரியர் நடராஜா ஏற்புரை வழங்குவார். அதன்பின்னர் நூல்கள் விநியோகம் செய்யப்படும். நிகழ்ச்சியில் இடையில் சீர்காழி புகழ் இராஜராஜ சோழனின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து இரவு உணவும் வழங்கப்படும். அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுமென விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.