Home Featured தமிழ் நாடு “கொடும் பழி சுமத்தப்பட்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன்” – வைகோ உருக்கம்!

“கொடும் பழி சுமத்தப்பட்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன்” – வைகோ உருக்கம்!

605
0
SHARE
Ad

vaikoசென்னை – ஒருவர் பின் ஒருவராக மதிமுக நிர்வாகிகள், திமுகவின் பக்கம் சென்று கொண்டிருக்கையில், திமுக தலைவர் கருணாநிதியும் அவரது மகன் ஸ்டாலினும், குறி வைத்து ஆசை காட்டி மதிமுகவினரை இழுப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் பேசிய வைகோ, “இரண்டு ஊழல் கட்சிகளையும் விரட்டியடித்து புதிய விடியல் வர வேண்டும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். மாற்றத்தை விரும்புபவர்கள் மக்கள் நலக் கூட்டணி பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் எங்கள் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. இது திமுக தலைவர் கருணாநிதிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.”

“கொடும் பழி சுமத்தப்பட்டு திமுக-வில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அதனால் 5 தோழர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். அந்த நெருப்பில் உருவானதுதான் மதிமுக. இப்போது தந்தையும் (கருணாநிதி), தனயனும் (ஸ்டாலின்) குறி வைத்து ஆசை காட்டி மதிமுகவினரை இழுக்கிறார்கள். எல்லாம் எனக்கு தெரிந்துதான் நடக்கிறது என்று கருணாநிதி ஒத்துக் கொண்டுள்ளார். அவர்கள் ஒருவரை இழுத்து சென்றால் புதிதாக 100 பேர் இணைந்து பணியாற்ற தயாராக வருகிறார்கள்.”

#TamilSchoolmychoice

“எங்கள் மக்கள் நலக்கூட்டணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வர வேண்டும் என்று pon-radhakrishnan-vijayakanthவிரும்புகிறோம். நிச்சயமாக வருவார் என்று நம்புகிறோம். நேரம் வரும்போது நேரில் சந்தித்து அழைப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.

விஜயகாந்த்துடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு:

மக்கள் நலக் கூட்டணியினர் விஜயகாந்தை தங்கள் பக்கம் வருமாறு அழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.