Home Featured இந்தியா பாட்டியாலா நீதிமன்றம் முழுவதும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் – காத்திருக்கும் பெரும் பரபரப்பு!

பாட்டியாலா நீதிமன்றம் முழுவதும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் – காத்திருக்கும் பெரும் பரபரப்பு!

520
0
SHARE
Ad

congressபாட்டியாலா – நேஷனல் ஹெரால்ட் வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் இன்று நேரில் ஆஜராக உள்ள நிலையில், பாட்டியாலா கவுஸ் மாவட்ட நீதிமன்றத்திற்கு சோனியா மகள் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கடந்த சில நிமிடங்களுக்கு முன்பு வந்துள்ளனர்.

சோனியாவும் ராகுலும் அடுத்த சில நிமிடங்களில் தொண்டர்களின் பேரணியுடன் நீதிமன்றத்திற்கு வருகை தர உள்ளதாகக் கூறப்படுகிறது.