Home Featured கலையுலகம் “இந்த முட்டா பீப் பசங்க பாட்ட பத்தி இளையராஜாவிடம் கேட்பதா?” – கங்கை அமரன் காட்டம்!

“இந்த முட்டா பீப் பசங்க பாட்ட பத்தி இளையராஜாவிடம் கேட்பதா?” – கங்கை அமரன் காட்டம்!

686
0
SHARE
Ad

ilaiyaraja1சென்னை – சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சிறப்பாக பணியாற்றிய தன்னார்வ மாணவர்களை, பாராட்டும் நோக்கத்தோடு சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அவர், பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் பீப் பாடல் குறித்து கேள்வி கேட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த இளையராஜா, “உனக்கு அறிவிருக்கா?” என்று கூறி கொந்தளித்துவிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், தனது பேஸ்புக் gangaiபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இளையராஜா போன்ற இசைப்பெரியோர்களிடம் எதைப் பற்றி கருத்துக்கள் கேட்பது என்ற வரம்பு வேண்டும். அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை. இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி அவர் கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல.”

“ஏன் ரஜனி சாரோட சொந்தக்காரப் பையன் தானே அனிரூத்? அவரக்கேளுங்க. ஏன் தமிழ் தமிழ்னு உசுர விடராரே அந்த வெங்காயத்தோட அப்பா டி ஆர். அவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்க. என் அன்புக்குரிய பத்திரிக்கை நண்பர்களே, உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.