Home கலை உலகம் சென்னையில் சினிமா பிளாஷ் பேக் கண்காட்சி!

சென்னையில் சினிமா பிளாஷ் பேக் கண்காட்சி!

535
0
SHARE
Ad

Cheran-7800101

சென்னை, டிசம்பர் 17- இந்திய சினிமாவின் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ‘பிளாஸ்பேக்’ என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்றை அண்ணா பல்கலைக் கழக மாணவர்களும், எத்திராஜ் கல்லூரி மாணவர்களும், இயக்குனர் வெங்கி மற்றும் இயக்குனர் கோரன் பாஸ்கல்சிவிக் ஆகியோரின் துணையுடன் நடத்தி வருகின்றனர்.

அக்கண்காட்சி டிசம்பர் 15 தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கண்காட்சி குறித்து நடிகர் மற்றும் இயக்குநரான சேரன் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், “ இக்கண்காட்சி மிக அற்புதமாக இருக்கிறது.சினிமாவை நேசிப்பவர்களும், சினிமாவில் தேடலோடு திரியும் இளைஞர்களும் சென்று பார்த்தால் வளரும் மாணவ சமூகம் மகிழ்ச்சி அடையும்” என்று தெரிவித்துள்ளார்.