Home நாடு சரும முடிகளை நீக்கும் வழிகள்

சரும முடிகளை நீக்கும் வழிகள்

774
0
SHARE
Ad

leg

கோலாலம்பூர், டிசம்பர் 17- சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இராசயணம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதைவிட இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதே சிறப்பு. இயற்கையான பொருட்களைக் கொண்டே நாம் சரும முடிகளை அகற்றலாம். இயற்கையாக கிடைக்கபெறும் பொருட்கள் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவததோடு அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும்.

சரும முடிகளை நீக்கும் வழிகள் :

#TamilSchoolmychoice

1. சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

2. 1 மேசைக் கரண்டி எலுமிச்சை சாற்றில், 4 கரண்டி தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

3. மஞ்சள் தூளை பாலில் சேர்த்து பசையாக செய்து சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி  சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

4. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில், 1 மேசைக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/2 கரண்டி சோள மாவு சேர்த்து  கெட்டியான பசைப்போல் கலந்து சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்த பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.

5. தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பசையாக செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும்.

மேல்குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறைகளை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். எனவே, இராசயண கலவைக் கொண்ட  பொருட்களை உபயோகிப்பதை தவிர்த்து விட்டு  இயற்கையாகவே கிடைக்கபெறும் பொருட்களை கொண்டு ஆரோக்கியமாக அழகை பராமறிப்போம்.