புத்ரஜெயா, டிச 19 – 2013 ஆம் ஆண்டிற்கான பிஎம்ஆர் (Penilaian Menengah Rendah – PMR) தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட சிறப்பாக வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த 2012 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகளை ஒப்பிட்டால், இந்த ஆண்டு தேர்வு எழுதிய 422,506 மாணவர்களில் 30,988 பேர் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தரம் பெற்றுள்ளனர். அப்படியானால் கடந்த ஆண்டை விட 0.41 சதவிகிதம் மதிப்பெண்கள் விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கல்வித்துறை பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் கைர் முகமட் யோசோப் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய தர விகிதம் (GPN) 2.71 ல் இருந்து 2.67 ஆகக் குறைந்துள்ளது (குறைவான விகிதம் சிறந்த தேர்ச்சியைக் குறிக்கும்) என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மலாய், வாழ்க்கை கல்வி போன்ற பாடங்களைத் தவிர, மற்ற பாடங்களில் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்றும் கைர் தெரிவித்தார்.