Home கலை உலகம் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் அமீர்கான்

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் அமீர்கான்

592
0
SHARE
Ad

aamir-khan_350_031813041449

சென்னை, டிசம்பர் 19 – நடிகர் அமீர் கான், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பதில், அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால், சமீபத்தில் சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதும், ஆர்வத்துடன் சம்மதித்தாராம்.

அந்த விழாவில் பங்கேற்று கடைசி வரை அனைவருடனும் கல கலப்பாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார். அவர் கூறுகையில்,’பொதுவாக, திரைப்பட விழாக்களில், நான் பங்கேற்பது இல்லை. ஆனால், சென்னையில் நடக்கும் விழா என்பதால் சம்மதித்தேன். என், கஜினி படத்தை இயக்கிய முருகதாஸ், நடிகர் கமல் ஹாசன், இயக்குனர் பாலச்சந்தர் போன்றோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன்  மனம் விட்டு பேசினேன். மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது’ என கூறினார்.