கோலாலம்பூர், டிசம்பர் 19- கூகுள் நிறுவனமானது 2013ம் ஆண்டு அதிகமாக தேடப்பட்ட சொற்களில் முன்னணியில் திகழும் 10 சொற்களை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில்,
முதலாவதாக கறுப்பின விடிவுக்கு போராடியவரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா(Nelson Mandela) திகழ்கிறார்.
இரண்டாவதாக Fast & Furious படத்தின் கதாநாயகன் பால் வாக்கர் (Paul Walker) காணப்படுகின்றார், இவர் அண்மையில் கார் விபத்து ஒன்றில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக அப்பிளின் தயாரிப்பான ஐபோன் 5S ( iPhone 5S) திறன்பேசி கைப்பேசி காணப்படுகின்றது.
நான்காவது இடத்தில் நடிகர் கோரி மோந்தேத் (Cory Monteith) காணப்படுகின்றார்.
ஐந்தாவது இடத்தில் ஹார்லெம் ஷேக் (Harlem Shake) எனும் சொல் காணப்படுகின்றது. இது ஒரு வகை நடனமாகும். இதற்கு போட்டியாகவே “கங்ணம் ஸ்டைல் நடனம்” உருவாக்கப்பட்டிருந்தது. ஹார்லெம் ஷேக் நடனம் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 1.7 மில்லியன் வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆறாவது இடத்தில் போஸ்தோம் மாராத்தான் (Boston Marathon) எனும் சொல் காணப்படுகின்றது. போஸ்தோம் எனும் இடத்தில் இடம்பெற்ற 117வது மரதன் ஓட்டப்போட்டிகளின்போது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏழாவதாக அரச குழந்தை (Royal baby) என்ற சொல் காணப்படுகின்றது. இது பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸிற்கும் கேத் மிடில்டனுக்கும் பிறந்த குழந்தையைக் குறிக்கின்றது. கடந்த ஜுலை மாதம் 22ம் திகதி வருங்கால இளவரசரை கேத் பெற்றெடுத்திருந்தார்.
எட்டாவது இடத்தில் சாம்சங் கேலக்ஸி S4 (Samsung Galaxy S4) என்ற சொல் இருக்கின்றது. இது சம்சுங் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக வினைத்திறன் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசி ஆகும்.
ஒன்பதாவது இடத்தில் பிளேஸ்டேஷன் 4 (PlayStation 4) காணப்படுகின்றது. ஹேம் பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சாதனம் இதுவாகும். மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யம் அடைந்த ஹேமிங் சாதனமாகக் காணப்படுகின்றது.
பத்தாவது இடத்தில் வட கொரியா (North Korea) என்ற சொல் இடம்பெற்றுள்ளது. தென்கொரியாவுடன் முறகல் நிலையை ஏற்படுத்திக்கொண்ட இந்த நாடு பல நல்ல விடயங்களுக்காகவும் எதிர்மறையான விடையங்களுக்காகவும் கூகுள் தேடலில் இடம்பெற்றுள்ளது.