Home உலகம் இங்கிலாந்தில் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இங்கிலாந்தில் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

524
0
SHARE
Ad

india_uk

லண்டன், டிசம்பர் 19- இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து காணப்படுவதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான தேசிய புள்ளியியல் ஆய்வு மையம் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரம் ஒன்றை நடத்தியது.

இதில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்தில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்து காணப்படுவதாக கூறியுள்ளது. அதன்படி கடந்த 1971-ம் ஆண்டுகளில் 3 லட்சத்து 13 ஆயிரம் ஆக இருந்த மக்கள் தொகை 2011-ல் 7 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.