Home அரசியல் சாஹிட்டுடன் எனக்கு முன்விரோதம் இல்லை – மாட் சாபு

சாஹிட்டுடன் எனக்கு முன்விரோதம் இல்லை – மாட் சாபு

587
0
SHARE
Ad

matsabu7 (1)கோலாலம்பூர், டிச 19 – ஷியாட் இஸ்லாமிய போதனை முறைகளைப் பின்பற்றுகின்றார் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் தன் மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் விதமாக ‘10 ஆதாரங்கள்’ வெளியிடச் சொல்லுங்கள் என்று பாஸ் கட்சியின் துணைத்தலைவர் முகமட் சாபு (மாட் சாபு) கூறியுள்ளார்.

மேலும், தான் கட்சி வேற்றுமைகளைக் கடந்து அம்னோ தலைவர்கள் உட்பட அனைவரிடமும் தான் நட்போடு இருப்பதாக மாட் சாபு குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு தனிப்பட்ட முறையில் அவர்களுடன் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லோரிடமும் நட்போடு தான் உள்ளேன். கடைசியாக நான் சாடியது முகமட் தாயிப்பை தான் (முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார்). அவரும் இப்போது எனக்கு நல்ல நண்பர் தான்” என்று நேற்று பங்சார் உத்தாமாவிலுள்ள வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முகமட் சாபு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், “சாஹிட் ஹமீடியுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சனையில்லை. நாங்கள் சில விவகாரங்களுக்காக விவாதித்தோம். ஆனால் அதுவும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக அல்ல” என்றும் முகமட் சாபு கூறினார்.

எனினும், ஷிசிம் (Shiism) என்பது இஸ்லாமில் ஒரு பகுதி என்பதை மத அறிஞர்கள் தான் விவாதிக்க வேண்டும். அது குறித்து சிறு அறிவுடைவர்கள் விவாதித்து முடிவெடுக்க முடியாது என்றும் முகமட் சாபு குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முகமட் சாபு வெளியிட்ட அறிக்கையில், தன் மீது து இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவும் தனக்கு அவப் பெயரை ஏற்படுத்தியதற்காகவும் தனது வழக்கறிஞர்கள் சாஹிட் மீது வழக்குப் பதிவு செய்வார்கள் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.