Home உலகம் தமிழ் எழுத்தாளர் ஜோ டி குருஸ்-க்கு சாகித்ய அகாடெமி விருது

தமிழ் எழுத்தாளர் ஜோ டி குருஸ்-க்கு சாகித்ய அகாடெமி விருது

469
0
SHARE
Ad

video6

சென்னை, டிசம்பர் 20-  எழுத்தாளர்களுக்கான உயரிய கெளரவமாக கருதப்படும் சாகித்ய அகாடெமி விருது பெறுவர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், தமிழில் கொற்கை நாவலை எழுதிய எழுத்தாளர் ஜோ டி குருஸ், 2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதை பெற்றிருக்கிறார். தமிழ் புதினத்திற்கான  எழுத்தாளர் விருது பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை ஒட்டி அவர் எழுதிய கொற்கை என்கிற நாவலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. 2009-ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி 2011 டிசம்பர் வரை வெளியான புத்தகங்கள் இந்த ஆண்டு விருதுக்கான பரித்துரைக்கு ஏற்கப்பட்டிருந்தன. இம்முறை கவிஞர்களே அதிக விருதுகளைப் பெற்றுள்ளனர். சமஸ்கிருதம், உருது, பெங்காலி உள்ளிட்ட 8 மொழி கவிஞர்கள் இதில் கெளரவிக்கப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

2014 மார்ச் மாதம் 11 ஆம் தேதி புது டில்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.