Home உலகம் இலண்டன் அப்போல்லோ நாடக அரங்கம் சரிந்து விழுந்து 88 பேர் காயம்!

இலண்டன் அப்போல்லோ நாடக அரங்கம் சரிந்து விழுந்து 88 பேர் காயம்!

533
0
SHARE
Ad

Apollo-theatre-Londonடிசம்பர் 20 – இலண்டன் மாநகரில் பிரசித்தி பெற்றவை நாடக அரங்குகள். இசையோடு கூடிய நாடகங்கள் தினமும் மேற்கு இலண்டனில் உள்ள பழமையான அரங்குகளில் நடைபெறும்.

#TamilSchoolmychoice

அத்தகைய ஓர் அரங்கமான அப்போல்லோ நாடக அரங்கின் (படம்) பால்கனி எனப்படும் மேல்மாடி அரங்கம் சரிந்து விழுந்ததில் 88 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 7 பேர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

112 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரங்கம் முழுக்க சுமார் 720 பேர்களைக் கொண்ட ரசிகர் கூட்டம் நிறைந்திருக்க, நேற்று இரவு சுமார் 8.15 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவம் நிகழ்ந்த உடனேயே, அரங்கத்தைச் சுற்றி வெண்ணிற தூசுகளோடு கூடிய புகைமண்டலம் அந்த இடத்தைச் சூழ்ந்தது. பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரல்களும் கேட்கத் தொடங்கின.

நடந்து கொண்டிருந்த  நாடகம் 45 நிமிடங்களைக் கடந்திருந்த வேளையில் இந்த சம்பவம் நடந்தது. மேல்மாடி அரங்கம் விழுவதற்கு முன்னால் கிறீச் சத்தங்கள் கேட்டாலும், அந்த சத்தங்கள் நாடகத்திலிருந்து வருவதாக பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் நினைத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளார்கள்.

பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இலண்டன் பொதுப் போக்குவரத்து பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு அதன் மூலம் காயமுற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.