Home உலகம் பிலிப்பைன்ஸ் நாட்டில் மேயர்–மனைவி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மேயர்–மனைவி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை!

450
0
SHARE
Ad

shooting

மணிலா, டிசம்பர் 20 – இன்று காலை மணிலா விமான நிலையத்தில் தெற்கு பிலிப்பைன்ஸ்சிலுள்ள லபான்கான் நகர மேயர் உகோல் தலும்பாவையும் அவரின் மனைவியையும் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் எதிர் பாராத விதமாக சரமாரியாக சுட்டனர்.

இதில், மேயர், அவரது மனைவி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவம்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மேயர் உகோல், அவரது மனைவி மற்றும் 1½ வயது சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

மேயர் சுடப்பட்ட காரணம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.