Home இந்தியா தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெற அமெரிக்க மறுப்பு !

தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெற அமெரிக்க மறுப்பு !

595
0
SHARE
Ad

devani

புது டெல்லி, டிசம்பர் 20 – இந்திய பெண் துணைத்தூதர் தேவையானி கோப்ரகடே மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேரி காம் இதனை கூறியுள்ளார்.வெளியுறவுத்துறை அமைச்சக வழக்குகளை தொடுக்கவோ அதனை மீட்கும் அமைப்போ கிடையாது என்றும் இந்த சூழ்நிலையில் நாங்கள் எப்படி தேவையானி மீதான வழக்குகளை திரும்பப் பெற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே பொது இடத்தில் வைத்து கைவிலங்கிட்டு தேவயானியை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்தததாக கூறப்படும் புகாரை அந்நாட்டின் அட்டினி ஜெனரல் பிரதீப் பராரா மறுத்துள்ளார். அமெரிக்கர்களுக்கு கூட வழங்கப்படாத சலுகைகள், தேவயானிக்கு கைது செய்வதற்கு முன்னால் வழங்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டதற்கு முன்னதாக தொலைபேசியில் பேசிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் அவரது இந்த கருத்தில் உடன்பாடு இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்கிடம் அந்நாட்டின் செயலாளர் ஷெர்மன் பேசினார். இந்நிலையில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் இறங்கியுள்ள இந்தியா அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு விமான நிலையங்களில் கொடுக்கப்படும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. தேவையானி மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வெளியுறவுத் தலைவர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது