Home அரசியல் மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும் – ஷாபி அப்டால்

மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும் – ஷாபி அப்டால்

502
0
SHARE
Ad

indexகோலாலம்பூர்,பிப்.12- மக்கள் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகும் மக்கள் இப்போது அனுபவிக்கும் வாழ்க்கை பாழாகும் என்கிறார் அம்னோ உதவித் தலைவர் முகம்மட் ஷாபி அப்டால்.

பாஸ் ஹூடுட் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதும் டிஏபி அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் நல்ல எடுத்துக்காட்டுகள் என்றாரவர். ஷாபி, நேற்றிரவு சம்பூர்ணா சீன வர்த்தக சங்கம் நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். .

பாதுகாப்பான எதிர்காலம், மேம்பாடு, அரசியல் நிலைத்தன்மை, அமைதி ஆகியவறுக்காக மக்கள், தொடர்ந்து தேசிய முன்னணியை  ஆதரிக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

கோலாலும்பூரில், புத்ரி அம்னோ தலைவரும், சுகாதார துணை அமைச்சருமான ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லின், சாபாவை மாற்றரசுக் கட்சி கைப்பற்றினால் மாநிலத்தின் எதிர்காலமே மங்கிப் போகும் என்று எச்சரித்தார்.

“இட ஒதுக்கீடு போன்ற சிறிய விவகாரத்தில்கூட மாற்றரசுக் கட்சிகளால் ஒத்துப்போக முடியவில்லை என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இதைக்கூட செய்ய முடியாதவர்கள் பெரிய விவகாரங்களை எப்படிக் கையாளப் போகிறார்கள்?”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் வினவினார்.