Home கலை உலகம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பரதேசி

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பரதேசி

468
0
SHARE
Ad

Paradesi-தமிழ் திரைப்பட இயக்குநர்களில் தங்களுக்கு என தனி முத்திரைப் பதித்துள்ளவர் பாலா.

தற்போது இவர் இயக்கியுள்ள  பரதேசி திரைப்படம் நிச்சயமாக தமிழ் திரையுலகில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பல்வேறு அம்சங்கள் பரதேசி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில், விரைவில் நடைபெற உள்ள கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

#TamilSchoolmychoice

முதலில் இப்படத்தை பிப்ரவரி 15ம் தேதி திரையிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் அது தள்ளிப்போனது. இந்த நிலையில், பரதேசி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட அனுப்பப்பட உள்ளது என்றும், அதனால், பட வெளியீடு தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியை அடிப்படையாக வைத்து பாலா இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர்.