Home உலகம் ஜெயலலிதாவை பிரதமராக்கும் கனவில் அதிமுக

ஜெயலலிதாவை பிரதமராக்கும் கனவில் அதிமுக

530
0
SHARE
Ad

jeya

சென்னை, டிசம்பர் 21- பிரதமர் வேட்பாளராக என்னை தெரிவு செய்வது அதிமுகவினரின் விருப்பம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மாளிகையில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

கூட்டம் நிறைவடைந்த பிறகு மண்டபத்திற்கு வெளியே அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா?

பதில்: கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அதற்கான அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது.

கேள்வி: உங்களை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லுகிறார்களே?

பதில்: அது எங்களது கட்சியினரின் விருப்பம். அதை பற்றி நான் இப்போது சொல்வதற்கு இல்லை.

கேள்வி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் முழக்கம் என்னவாக இருக்கும்?

பதில்: அமைதி, வளம், வளர்ச்சி இது எங்கள் தேர்தல் கோரிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.