Home நாடு பழம்பெரும் எழுத்தாளர் மு.அன்புச் செல்வன் காலமானார்!

பழம்பெரும் எழுத்தாளர் மு.அன்புச் செல்வன் காலமானார்!

994
0
SHARE
Ad

Anbu-Chelvan-300X200கோலாலம்பூர், டிசம்பர் 22 – நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், தமிழ் இலக்கிய உலகில் தனது எழுத்துப் படிவங்களால் தனி இடம் பிடித்தவருமான மு.அன்புச்செல்வன் (படம்) நேற்று சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.

#TamilSchoolmychoice

அண்மையக் காலமாக மலேசிய நண்பன் பத்திரிக்கையில் ஞாயிறு பதிப்பின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வந்தார்.

மலேசிய எழுத்துலகில் சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல்கள் என பல முனைகளில் தனது இலக்கிய ஆளுமையை ஆழமாகப் பதிவு செய்தவர், பெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட அன்புச் செல்வன்.

செந்துல் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்து, செந்துல் தமிழ்ப் பள்ளியில் கல்வி கற்றவரான அன்புச் செல்வன், செந்துல் வட்டாரத்தின் வரலாற்றையும், அங்கு தான் சந்தித்த அனுபவங்களையும் தொகுத்து வழங்கிய கட்டுரைத்தொடர் வாசகர்களிடையே அவருக்கு பிரபல்யத்தைப் பெற்றுத் தந்தது.

வானொலியிலும், செய்தி வாசிப்பாளராக தனது குரல் வளத்தால் முத்திரையைப் பதித்தவர் அன்புச் செல்வன். மலேசியாவில் நடைபெற்ற பல்வேறு இலக்கியக் கருத்தரங்கள், சிறுகதைக் கருத்தரங்கள், இலக்கிய நிகழ்வுகள் என பல்வேறு மொழி, இலக்கிய அங்கங்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டவர் அன்புச் செல்வன்.

அவரது நல்லுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை 22 டிசம்பர் பிற்பகல் 3 மணியளவில் கீழ்க்காணும் அவரது இல்ல முகவரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு செந்துல் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள இந்து இடுகாட்டில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 No: 94, Jalan Kassipillai

Off Jalan Ipoh, 52100 Kuala Lumpur

தொடர்புக்கு: 016-3044440