Home உலகம் காங்கிரஸ் கட்சி ஊழலை எதிர்க்கும்: ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சி ஊழலை எதிர்க்கும்: ராகுல்காந்தி

864
0
SHARE
Ad

M_Id_377012_Rahul_Gandhi

புதுடெல்லி, டிசம்பர் 22- டெல்லியில் நடந்த கருத்தரங்கில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி , “நான்கு மாநில தேர்தல் முடிவை பணிவுடன் காங்கிரஸ் கட்சி ஏற்கிறது” என தெரிவித்தார்.

மேலும், அக்கருத்தரங்கில் ராகுல் காந்தி தவறுகளில் இருந்து பாடம் கற்க தேர்தல் முடிவு உதவியுள்ளது என கூறினார். மக்களை உறிஞ்சும் தீமையாக ஊழல் உள்ளது எனவும் ஊழலை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயாத்தில் உள்ளோம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனவே,ஊழலை ஒழிப்பதற்காகவே லோக்பால் மசோதாவை நிறைவேற்றி உள்ளோம், ஊழலை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சியே முதலிடத்தில் இருக்கிறது என்றும் வறுமையை ஒழிக்க வளர்ச்சி அவசியம் என்றும் ராகுல்காந்தி கருத்தரங்கில் தெரிவித்தார்.