Home உலகம் மகளை திருமணம் செய்ய வரதட்சணையாக பேஸ் புக்கில் 10 லட்சம் லைக் வேண்டும்

மகளை திருமணம் செய்ய வரதட்சணையாக பேஸ் புக்கில் 10 லட்சம் லைக் வேண்டும்

554
0
SHARE
Ad

fb like

லண்டன், டிசம்பர் 22- ஏமன் நாட்டின் தயீஷ் என்ற இடத்தை சேர்ந்தவர் சலீம் ஆயாஷ், கவிஞர். இவர் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வந்தார். இதற்காக மணமகனிடம் வித்தியாசமான வரதட்சணையை கேட்டுள்ளார்.

தனது மருமகனாக வரப்போகிறவர் பேஸ் புக்கில் 10 லட்சம் லைக் வாங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதான் தனது பெண்ணை மணப்பதற்காக மணமகன் கொடுக்க வேண்டிய வரதட்சணை என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக மணமகன் ஒரு மாதமோ, ஒரு வருடமோ பல வருடமோ அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சலுகை அளித்துள்ளார். இவரது இந்த செய்தியை தனது பேஸ்புக் இணையதளத்திலும் பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதை பார்த்த பலர் சலீமுக்கு லைக் கொடுக்க தொடங்கி உள்ளனர். இதுவரை 30 ஆயிரம் லைக் விழுந்துள்ளன.

லண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ இணைய இதழில் இச்செய்தி வெளியானது என்பது இங்கு குறிப்பிடதக்கது.