கலிபோர்னியா: நேற்றிரவு தொடங்கி பிரபல சமூக வலைத்தளமாகிய பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால், பயனர்கள் அவற்றை திறப்பதற்கும் கருத்துகளை பதிவிடுவதற்கும் முடியவில்லை என டுவிட்டர் பக்கத்தில் மக்கள் ஏமாற்றதை தெரிவித்து வருகின்றனர். இம்மாதிரியான, பிரச்சனைகள் முன்னதாகவே எழுந்து பின்பு அவை சரி செய்யப்பட்டன. ஆயினும், மீண்டும் அது தலைத்தூக்கி உள்ளது.
மலேசியா உட்பட, வடமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில் பேஸ்புக் முடங்கியுள்ளது.
நேற்றிரவு (மார்ச் 13) பல சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர். பேஸ்புக்கில் புதிய பதிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பல மணி நேரங்கள் ஆகியும் நீடிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.