Home நாடு பிரசன்னா டிக்ஸாவை தேடும் விவகாரத்தில் எப்.பி.ஐ உதவி நாடப்படும்!

பிரசன்னா டிக்ஸாவை தேடும் விவகாரத்தில் எப்.பி.ஐ உதவி நாடப்படும்!

1135
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்ஸாவைத் தேடிக் கண்டுபிடிப்பதில், இந்திரா காந்தி அதிரடி அணி (இங்காட்) அமெரிக்க தூதரகத்தின் உதவியை நாட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (எப்பிஐ) உதவியை நாட இருப்பதாக அதன் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் 19-ஆம் தேதி மலேசியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்திப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும், பிரசன்னா டிக்ஸாவின் முழு விபரமும் அடங்கிய ஆவணங்களும் அவர்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். மலேசிய காவல் துறையினரின் நடவடிக்கைகள் மூலம் ஏமாற்றமடைந்ததன் காரணமாக இந்த முடிவினை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கை மனிதக் கடத்தல் என்று தாங்கள் வகைப்படுத்தி இருப்பதாகவும், இதற்கு அமெரிக்கா உதவும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மலேசியாகினி செய்தி இணையத்தளத்திடம் தெரிவித்தார்.