Home நாடு கிம் கிம் ஆற்றை சுத்திகரிப்பு செய்ய 6.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

கிம் கிம் ஆற்றை சுத்திகரிப்பு செய்ய 6.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

820
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: கிம் கிம் ஆற்று நீர் மாசு பட்டதைத் தொடர்ந்து ஜொகூர் மாநில அரசு, ஆற்றில் கலந்திருக்கும் இரசாயனப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்வதற்காக, அவசர ஒதுக்கீடாக 6.4 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்துள்ளது.

சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை செயற்குழு உறுப்பினர், டாக்டர் ஷாருட்டின் ஜாமால் கூறுகையில், சுமார் 1.5 கிலோமீட்டருக்கு, மாசுபாட்டப் பகுதியிலிருந்து, ஆற்று நீரை உள்ளடக்கிய பகுதிகளில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்த நச்சுக் காற்று மற்றும் தூய்மைக் கேடு சம்பவத்தினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள 111 பள்ளிகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த உத்தரவு காலவரையின்றி நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தினால் தற்போது 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஷாருட்டின் தகவல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகளினால் ஏற்பட்ட இராசயன தூய்மைக் கேட்டினால் 13 பள்ளிகள் மூடப்பட்டதோடு, 300 மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில் நச்சுக் கழிவுகளை ஆற்றில் கொட்டியதற்காக  கார்களுக்கான சக்கரங்களை மறுசுழற்சி முறையில் தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர்  இன்று வியாழக்கிழமை சுற்றுச் சூழல் தர சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என ஆற்றல், தொழில்நுட்பம், அறிவியல், பருவநிலை மாற்ற அமைச்சரான அமைச்சர் இயோ பீ இன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.