பாசிர் கூடாங்: கிம் கிம் ஆற்று நீரில் கலந்த இராசயனப் பொருட்களை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கு 10 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டதாக எரிபொருள், அறிவியல், தொழில்நுட்ப, பருவநிலை மாற்ற, சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார்.
முன்னதாக, மார்ச் 13-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நடவடிக்கையில் சுமார் 900 மெட்ரிக் டன் கழிவுப் பொருட்களும், 1,500 மெட்ரிக் டன் மாசுபட்ட தண்ணீரும் அகற்றப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும், இம்மாதிரியாக கழிவுப் பொருட்களை கொட்டும் 46 இடங்களை அரசு கண்டறிந்து உள்ளதாக இயோ குறிப்பிட்டார். அவை, கூடிய விரவில் சுத்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
கிம் கிம் ஆற்று நீர் மாசடைந்த விவகாரத்தில் ஒரு சிலரை கைது செய்ததாகக் கூறப்பட்டது. ஆயினும், அவர்களின் பெயர் மற்றும் அடையாளங்களை ஏன் பொதுவில் பகிரப்படவில்லை என பொது மக்கள் சமூகப் பக்கங்களில் கேள்விகளைத் தொடுத்து வருகின்றனர்.
இம்மாதிரியான விசயங்களில் மக்களுக்கு சரியான பாடத்தை புகுட்டுவதற்கு சம்பந்தப்பட்டவர்களின் முகங்கள் பொதுவில் பகிரப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் மறைத்து வைத்து விசாரிப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மாதிரியான, நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, தக்க தண்டனையை வழங்குவதற்காக அமைச்சு தேசிய வழக்கறிஞர் மன்றத்திடம் பேச்சு வார்த்தை நடத்தும் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதனால், வரையிலும், இந்த விவகாரம் சம்பந்தமாக எந்த ஒரு நபரின் பெயரும் வெளிவராமல் இருப்பது மக்களிடத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.