Home நாடு பூச்சோங்கில் இயோ பீ யீன் போட்டி

பூச்சோங்கில் இயோ பீ யீன் போட்டி

568
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : நடப்பு பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் டியோ டாமன்சாராவில் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பாக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யீன் பூச்சோங்கில் போட்டியிடுவார் என ஜசெக அறிவித்துள்ளது.

சிலாங்கூரில் உள்ள டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான டோனி புவா அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து ஜசெகவிற்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும் டோனி புவா அறிவித்துள்ளார்.

அவரின் முடிவைத் தொடர்ந்து டாமன்சாரா தொகுதியில் ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ போட்டியிடுகிறார். தற்போது பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கோபிந்த் சிங் அங்கிருந்து தொகுதி மாறி டாமன்சாராவில் போட்டியிடவிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் ஜோகூர் பாக்ரி நாடாளுமன்ற உறுப்பினரான இயோ பீ யீன் தொகுதி மாறி பூச்சோங்கில் போட்டியிடுகிறார்,