Home நாடு புத்ரா ஜெயா தொகுதியில் ராட்சி ஜிடின் பெரிக்காத்தான் சார்பில் போட்டி

புத்ரா ஜெயா தொகுதியில் ராட்சி ஜிடின் பெரிக்காத்தான் சார்பில் போட்டி

373
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நடப்பு கல்வி அமைச்சர் முகமட் ராட்சி மாட் ஜிடின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் பெர்சாத்து வேட்பாளராக புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

அம்னோவின் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தற்போது புத்ரா ஜெயா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் மீண்டும் இங்கு போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

14-வது பொதுத் தேர்தலில் கிளந்தானில் உள்ள கெத்தேரே தொகுதியில் போட்டியிட்டார் ராட்சி மாட் ஜிடின்.  அம்னோவின் அனுவார் மூசாவிடம் மும்முனைப் போட்டியில் தோல்வியைத் தழுவினார். அந்த மும்முனைப் போட்டியில் பாஸ் இரண்டாவது நிலையில் அதிக வாக்குகளைப் பெற்றது. ராட்சி 3-வது நிலையைப் பெற்றார். இருப்பினும் பின்னர் பெர்சாத்து கட்சி சார்பில் செனட்டராக நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

கலைக்கப்பட்ட இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவையில் அனுவார் மூசா – ராட்சி இருவருமே அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.